கீழடியில் இன்று பழங்கால சுவர் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில், அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பழங்கால சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், இன்று, பழங்கால சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பழங்கால உறை கிணறு, திண்ணை போன்ற அமைப்பு மற்றும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து, அந்த பொருட்கள் எந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப் பட்டவை என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version