பஜாஜ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஜனவரி 14-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஸ்கூட்டர் சென்னை, பெங்களூரு, பூனே, மும்பை மற்றும் டெல்லி என ஐந்து நகரங்களில் வெளியிடப்பட உள்ளது. அதன் பின் மற்ற நகரங்களில் வெளியாக உள்ளது. ஐந்து நகரங்களில் பூனே மற்றும் பெங்களூருவில் மட்டும் செட்டாக் முன்பதிவு தொடங்கியுள்ளது.
பஜாஜ் நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கே.டி.எம். விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.