பேட்மிண்டன் : சுஹாஸ் யாதிராஜூக்கு வெள்ளி

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில், 200 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ஆம் தேதி பாராலிம்க் போட்டிகள் தொடங்கின. இதுவரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 93 தங்கம், 57 வெள்ளி, 50 வெண்கலம் என 200 பதக்கங்களுடன் சீனா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 41 தங்கம், 38 வெள்ளி, 43 வெண்கலம் என 122 பதக்கங்களுடன் பிரிட்டன் இரண்டாவது இடத்திலும், 36 தங்கம், 32 வெள்ளி, 49 வெண்கலம் என 117 பதக்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 3வது இடத்திலும் உள்ளன. 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் இந்தியா 26வது இடத்தில் உள்ளது.

இதனிடையே, பாராலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. நிறைவு விழாவில் துப்பாக்கி சூட்டில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லேகாரா தேசிய கொடியை ஏந்துகிறார்.

Exit mobile version