சொந்த மண்ணில் சுருண்டது இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது இவ்விரு அணிகள் மோதிய இந்த மூன்று போட்டிகளும் முழுமையாக ஐந்து நாட்கள் நடைபெறவில்லை. இன்று காலை தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டமானது முதல் செசனிலேயே முடிந்துவிட்டது. அந்த அளவிற்கு இந்தியா படுமோசமாக விளையாடியுள்ளது. இந்தியாவிற்கு ஏற்றதுபோல ஆடுகளங்களை வடிவமைத்தது தான் மிகப்பெரிய சிக்கலாகிவிட்டது என்று கிரிக்கெட் நிபுணர்கள் பேசி வருகிறார்கள். முழுக்க முழுக்க இந்திய மண்ணைப் பொறுத்தவரை ஸ்பின்னர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்துள்ளது. இந்தப் போட்டியிலுமே அப்படித்தான் நடந்துள்ளது. பவுலர்கள் கையில்தான் ஆட்டமே என்று இருந்திருப்பது ஒரு சிறப்புதான் என்றாலும் அது ஆஸ்திரேலியா பவுலர்களின் கை என்பது இரண்டாவதுதான் தெரிய வந்துள்ளது. காரணம் நேற்றைய இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் அதுபோல இருந்ததுதான். ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் எட்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை படைத்தார். India vs Australia Live Cricket Score Border Gavaskar Trophy 2023 IND vs  AUS 3rd Test 1st innings Live Score Online Updates in Hindi Holkar Cricket  Stadium Indore

இந்திய பேட்டிங்கில் புஜாரா மட்டுமே நம்பிக்கை அளித்தார். அவர் அடித்த அரை சதம்தான் இந்திய ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவியது. அதுவுமே 76 ரன்கள் இலக்குதான். இதனை இன்று காலை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது. அஸ்வினின் பந்துவீச்சில் எந்த ரன்களும் எடுக்காமல் உஸ்மான் கவாஜா பெவிலியன் சென்றார். ஆனால் ட்ராவிஸ் ஹெட் நிலைத்து நின்று 49 ரன்கள் எடுத்தார். மேலும் லபுஷேனும் 28 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி எள்தில் வென்றது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டி மார்ச் 9 தொடங்க உள்ளது. அதில் இந்தியா வெற்றி பெறுவதைப் பொறுத்துதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்கிறதா? இல்லையா? என்பது தெரியும்.

Exit mobile version