நீண்ட நாட்களுக்கு பிறகு மோசமான பேட்டிங்கால் தோற்றதாக இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்
நியூசிலாந்து – இந்தியா இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 92 ரன்களில் சுருண்டு ஏமாற்றமளித்தது.பின்னர் 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 14 புள்ளி 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்களுடைய மோசமான பேட்டிங்கில் இதுவும் ஒன்று. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்துகளை அற்புதமாக ஸ்விங் செய்ததகவும் அவர் பாராட்டியுள்ளார்.இதனிடையே 10 ஓவர்களை வீசிய டிரென்ட் போல்ட் 4 மெய்டன் ஓவர்களுடன் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இந்தியா மோசமான தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த டிரெண்ட் போல்ட், பந்து ஸ்விங் ஆனால் நான் வித்தியாசமான பந்து வீச்சாளர் என்று தெரிவித்துள்ளார். பந்து நன்றாக ஸ்விங் ஆவதற்கு வானிலையே காரணம் என்று தெரிவித்துள்ள அவர், பந்து காற்றிலே மூவ் ஆனதை பார்க்க சிறப்பாக இருந்ததும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.