உலகை காக்கும் சூப்பர் ஹீரோக்களில் மிகப்பிரபலமானவர் “ஸ்பைடர்மேன்”. கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமான அந்த கதாபாத்திரத்தின் உரிமை தற்போது வரை சோனி நிறுவனத்திடம் உள்ளது.
ஆனால் 2015ல் சோனி நிறுவனம், “ஸ்பைடர்மேன்” கதாபாத்திரத்தை உருவாக்கிய மார்வெல் நிறுவனமும் இணைந்து மார்வெல் நிறுவனத்தின் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தினை பயன்படுத்தலாம் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்பின் அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் ஹோம்கமிங், spider far from home உள்ளிட்ட பல படங்களில் அந்த கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்பைடர்மேன் வரும் படங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50%-ஐ கேட்ட மார்வெல் நிறுவனத்தின் கோரிக்கையை சோனி நிறுவனம் நிராகரித்தது. இதனையடுத்து #savespiderman என்ற ஹேஸ்டேக் இணையதளங்களில் ட்ரெண்டாகின.
இந்நிலையில் மார்வெல் நிறுவனம்-சோனி நிறுவனம் இடையேயான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுக்கு வந்தது எனவும், இதன் மூலம் இனிமேல் மார்வெல் நிறுவனப் படங்களில் ஸ்பைடர்மேன் கேரக்டர் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்வெல் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.