சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்தநாள் ஜூலை 30ம் தேதியை மருத்துவமனை தினமாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனை சார்பில் சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து, மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

Exit mobile version