ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம் சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது : அருண் ஜேட்லி

மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம், சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம் துவங்கிய 100 நாளில் 6 லட்சத்து 85 ஆயிரம் நோயாளிகள், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தனது பேஸ்புக்கில் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்த காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் போது, பயன்பெறுவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 கோடியாக அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ள ஆயுஸ்மான் பாரத் திட்டம், நாட்டு மக்களின் தரமான சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும் என்றும் ஜேட்லி கூறியுள்ளார்.

Exit mobile version