நாகர்கோவிலில் புற்றுநோய் குறித்த ஆயுர்வேத மருத்துவ முகாம்

நாகர்கோவிலில் புற்று நோய் குறித்தும் ஆயுர்வேத மருத்துவம் குறித்தும் நடந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என பெயர் பெற்ற இந்த மருத்துவ கல்லூரியில், புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கும் நிரந்தர குணம் கொண்ட மருந்துகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆயுர்வேத மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த இலவச முகாமில் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் தேவையான மருந்துகளை இலவசமாக கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

Exit mobile version