அயோத்தி வழக்கு விசாரணை 26ம் தேதி முதல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், 1992ம் ஆண்டு, இந்து அமைப்புகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இவ்வழக்கில், பாபர் மசூதி இருந்த 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பும், சரிசமமாக பங்கிட்டுக் கொள்ள உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, மூன்று தரப்பினர் உள்பட, பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், பிப்ரவரி 26 ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.