அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சட்டம், ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளதால், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரும் 13 ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி, கோராக்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம், ஒழுங்கை கண்காணிக்க அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி வரை, போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.