அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா ஆகிய தரப்பினர் 3 பாகமாக பிரித்து பகிர்ந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக் கூறி ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Exit mobile version