அயோத்தி வழக்கு: சமரச குழுவிற்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கில் சமரசக் குழுவினரின் வேண்டுகோளை ஏற்று அறிக்கை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 15ம் தேதிவரை கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா உள்ளிட்ட சமரச குழுவினர் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், சமசர குழுவினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 15ம் தேதிவரை கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. சமரச குழுவினரின் பேச்சுவார்த்தையை இடையில் நிறுத்த விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலை அடுத்து இந்த வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Exit mobile version