அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சமரச தீர்வுக்கு அனுப்ப முடிவு

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சமரச தீர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய் . சந்திர சூட், அஷோக் பூஷண், எஸ்.ஏ நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தனியார் நிலம் தொடர்பானது அல்ல என்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என சுட்டிக்காட்டினர். எனவே சமசர தீர்வுக்கான வாய்ப்பினை வழங்கப்போவதாகவும் இது தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்கபடும் எனவும் கூறியுள்ளனர். இதனிடையே சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான ஆவணங்களை 6 வாரங்களில்மொழிப்பெயர்த்து வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து வழக்கு மார்ச் மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Exit mobile version