அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1993ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் அயோத்தி சட்டத்தை நிறைவேற்றி சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா, நிர்மோகி அகாரா ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாக பகிர்ந்து கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 13-க்கும் மேற்பட்ட இந்து – முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றன.

இது தொடர்பான வழக்கை முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்து வந்தது. அவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version