82 வயது முதியவருக்கு அயோடிக் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

82 வயது முதியவருக்கு இதயத்தில் உள்ள அயோடிக் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமணை சாதனை படைத்துள்ளது.

சென்னையை சேர்ந்த 82 வயதான சத்திய பால் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சில வருடங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில், அண்மையில் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் உள்ள அயோட்டிக் வால்வை மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சென்னையில் உள்ள பல மருத்துவமனைகள் முன் வராத நிலையில், அப்பல்லோ மருத்துவமனையை நாடியுள்ளார். இதை தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனை இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. ஏற்கனவே பொறுத்தப்பட்டு பழுதடைந்த அயோட்டிக் வால்வை மாற்றி புதிய வால்வை பொறுத்தி சாதனை படைத்துள்ளது.

Exit mobile version