கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை குறித்து வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், கோடை காலத்தில் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை குறித்து வேளாண் துறை சார்பில், கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டுப்புற பாடல் வாயிலாக கலைக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சொட்டுநீர் பாசனத்தின் மூலம் பயிர்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் செல்வதால் அதிக மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகளிடம் எடுத்து கூறப்பட்டது. விவசாயிகளுக்காக அரசு செயல்படுத்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் வேளாண் துறையினர் எடுத்துரைத்தனர்.
Discussion about this post