ஜெயங்கொண்டத்தில் நிழல் இல்லாத நேரம் பற்றி வட்ட வடிவில் நின்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில், நிழல் இல்லாத நாள் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கப்பட்டது. மதியம் 12:11 மணிக்கு மட்டும் நிழல் பூஜ்யமாகிவிடும். இந்த அரிய நிகழ்வில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வட்ட வடிவில் நின்றனர். அப்போது இரண்டு நிமிடம் மாற்று இடத்தில் பிரதிபலிக்காமல் நிழலானது, ஒரே இடத்தில் இருந்த அதிசயத்தை கண்டு பள்ளி மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் ரசித்தனர். மாணவர்களின் அறிவாற்றல் மேம்படுவதற்காகவே இது போன்ற அறிவியல் சார்ந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.