காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் இருந்து 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட பிரசார வாகனங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆயுதம் ஏந்திய காவலர் உதவியுடன் வாகனங்களில் செல்லும் அலுவலர்கள், 11 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று முதல் 5 நாட்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

Exit mobile version