அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இந்த பிரசாரக் கூட்டத்திற்கு தாராபுரம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் ஆங்கில வழிக்கல்வி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மேலும், சத்துணவு, மசாலா முட்டை, நூலகங்கள், சுத்தமான குடிநீர், கணினி வசதி உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Exit mobile version