உதகையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக குறும்படம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி உதகை அடுத்த கேத்தி CSI தனியார் கல்லூரியில் திரையிடப்பட்டது. நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியினை நீலகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு மாணவ மாணவியர் தேர்தல் பற்றிய விழிப்புணர்ச்சிக்காக மாரத்தான் கையெழுத்துயிட்டனர். இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆயிரத்து 500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.