மக்களவை தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
திருப்பாலை அருகே உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார். ஐயர் பங்காளாவில் இருந்து கல்லூரி வரை நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று, தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்தநிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரணியின் துவக்கத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம் ஆகியவை மக்களவை கவர்ந்தது.