உதகையில் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க விழிப்புணர்வு

உதகை மலர்க் கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி, ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 123-வது மலர் கண்காட்சி கடந்த 17 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று வார விடுமுறை நாள் என்பதால் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 51 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உதகை தாவரவியல் பூங்காவில் ஆடை, அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 5 பிரிவுகளாக நடைபெற்ற ஆடை, அலங்கார அணிவகுப்பில் பலவிதமான புதிய ஆடைகளை இளம்பெண்கள் அறிமுகப்படுத்திய விதம் காண்போரை வெகுவாக கவர்ந்தது

Exit mobile version