காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில நாட்களாகவே வெயிலும், மழையும் மாறி மாறி வரும் சூழல் நிலவுவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணி தொடங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகராட்சி அலுவலகம் அருகே மனிதச் சங்கிலிப் பேரணி நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் ஜீவா இளங்கோ கலந்துகொண்டு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து எடுத்துரைத்தார்.