தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தோல் பாவை கூத்து மூலம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், தொடுதல், பெண்மை பாதுகாப்பு பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றியும், ஆபத்து காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக கூறிய மாணவிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.