மக்களவை தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபாகர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் வாக்களிக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் பேசிய ஆட்சியர், 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 17 ஆயிரம் பேர் உள்ளதாகவும், இதில் கண்பார்வையற்றவர்கள் 2 ஆயிரத்து 800 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளி வாக்களார்கள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.