பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு: கின்னஸ் சாதனை

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரத்து 367 மாணவர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப பயிலகமான சிப்பெட்டின் 50 ஆண்டுகள் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 3 ஆயிரத்து 367 மாணவர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, கின்னஸ் சாதனைக்காக சான்றிதழ் மற்றும் கோப்பையை உலக சாதனை அறிவிப்பாளர் விவேக் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செய்த இந்த சாதனை தற்போது முதலிடத்தில் இருப்பதாக கூறினார்.

Exit mobile version