மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வழியுறுத்தி சென்னையில் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சென்னை கோட்டூர்புரத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு குறித்து குடியிருப்பு வாசிகளிடம் எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள 12 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளில், முதற்கட்டமாக வார்டுக்கு ஆயிரம் வீடுகள் வீதம் 2 லட்சம் வீடுகளில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மழை நீர் சேகரிப்பு திட்டத்தை உறுதிப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.