திருவண்ணாமலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள், கற்பூரம் ஏற்றி தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துரிஞ்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு, 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், தேர்தலின்போது எந்தப் பரிசுப் பொருளையும், பணத்தையும் வாங்காமல், ஜனநாயக முறைப்படி, தேர்தலில் நியாயமாக வாக்களிப்போம் என்று, மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அலுவலருமான, கந்தசாமி முன்னிலையில், கற்பூரம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.