கடலூர் அருகே இயற்கை வழி வேளாண் முறையை மேற்கொள்வது பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் செந்தமிழ் மரபு வேளாண் நடுவம் சார்பாக உழவு தொழிலை போற்றும் விதமாகாவும், இயற்கை வழி வேளாண் முறையை மேற்கொள்வது பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் அறுவடைத்திருவிழா நடைபெற்றது. இதில் மரபுசார்ந்த நெல் விதைகள், காய்கறி விதைகள், சிறுதானிய விதைகள், இயற்கை இடு பொருட்கள், மதிப்புக்கூட்டபட்ட பொருட்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தி, உருவாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை கொண்டு சமைத்து, இயற்கை வழி விவசாயத்தை மேற்கொள்ளும் குடும்பத்தினருக்கு உணவு பரிமாறபட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.