உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் இருசக்கர வாகன சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புனேவை சேர்ந்த முதியவருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் பிரமோத் லக்ஸ்மன் மகாஜன். 68 வயது முதியவரான இவர், உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியா முழுவதும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகன பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த அக்டோர்பர் மாதம் தனது பயணத்தை தொடங்கி, தற்போது மதுரை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் சண்முகசுந்தரத்தை சந்தித்து, உடல் உறுப்பு தானம் பற்றி ஆலோசனை நடத்தினார்.