பிளாஸ்டிக் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகை கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பங்களை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பார்வையிட்டார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகை கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் JCI அமைப்பு சார்பில் பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்கரையில் மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திமிங்கலம், ஆமை, மீன், புத்தர், சிங்கம் உள்ளிட்ட சிற்பங்கள் தத்ரூபமாக இடம் பெற்றிருந்தன. கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மணல் சிற்பங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதையடுத்து மணல் சிற்பங்களை வடித்த கலைஞர்கள் மட்டும் மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.