கோவை ஈஷா யோக மையத்தில், காவிரி கூக்குரல் இயக்கத்தின் விழிப்புணர்வு வாகன பேரணியை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். வேளாண் காடு வளர்ப்பு மூலம், காவிரி நதியை மீட்டெடுக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகனப் பேரணி, காவிரி கூக்குரல் என்ற பெயரில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் கிராமங்களில், விவசாயிகள் பொருளாதார ரீதியாக பயன்பெறும் விதமாக, மரம் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள, ஆதி யோகி சிலை முன் தொடங்கிய பேரணியை, ஈஷா யோக மையத்தின் அறக்கட்டளை நிறுவனர், ஜக்கி வாசுதேவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.