தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் ஈரோட்டில் யங் இந்தியன் அமைப்பின் சார்பில் சாலையோர சுவர்களில் ஓவியங்களை வரைந்தது காண்போரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அதிகமாக செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள சுவர்களில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார மரபு ஓவியங்களை தீட்டி வருகின்றனர். குறிப்பாக முகநூல் மூலம் பார்த்துவிட்டு அதிகப்படியான இளைஞர்கள் இந்த அமைப்புகளுடன் இணைந்து ஓவியங்களை வரைந்து, ஈரோட்டை எழில் மிகு நகரமாக மாற்றி வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் நமது பாரம்பரியத்தை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பது தன்னார்வலர்களின் கருத்தாக உள்ளது.