சேலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு முகாம்

சேலத்தில், 1400 பேருக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளில், துணை வாக்குசாவடி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விவி பேட் இயந்திரம் இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், வாக்குப் பதிவு முறை குறித்து, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெளிவு படுத்தினார்.

தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, 1400க்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட 11 வாக்குசாவடியில், துணை வாக்கு சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இம்மாதம் 23, 24 தேதிகளில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு, திருத்த முகாமை பயன்படுத்திக் கொள்ளவும் ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version