மதுரை அருகே, தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தவும், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நுண்நீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண் துறைக்கு ஒதுக்கிய 30 கோடி ரூபாய் நிதியில், வேளாண் துறை மூலம் விவசாயத்தை மேம்படுத்தவும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாயிகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் நுண்நீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சோளங்குருணி, வலையங்குளம் நல்லூர் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேரடியாக வந்து கலந்துகொண்டு படிவங்களை பூர்த்தி செய்து பயன் பெற்றனர்.