விழிப்புணர்வு விளம்பர படங்களுக்கு பரிசு: சுற்றுச்சூழல் துறை

விழிப்புணர்வு விளம்பர படங்கள் உங்களிடம் உள்ளதா? அப்படி இருந்தால் உங்களுக்கு பரிசுத் தொகை ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.5 லட்சம் என்று உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது.

சுற்றுச்சூழல் துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிலம்,காற்று, நீர்,வானம், தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள்,விலங்குகள் போன்ற ஏதாவது ஒரு தலைப்பில் குறும்படம் எடுக்கலாம்.அந்த குறுகிய நேர படமானது ஊடகங்களில் வெளியிடும் மாதிரி தரமான விழிப்புணர்வு படமாக இருக்க வேண்டும் என்றும், திரைப்படத்துறையில் இயக்குனர், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் அனுபவம் உள்ள தனிநபரிடம் இருந்தும் வரவேற்க படுகிறது என சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி அனுப்பும் விழிப்புணர்வு விளம்பர படங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். அத்துடன் 2 நிமிடங்களுக்குள் எச்.டி. பிரிண்டாக இருக்க வேண்டும் . விழிப்புணர்வு படத்தின் மைய கதை யாரையும் குறிக்கும் விதமாகவோ, அரசின் திட்டங்களை கேலி செய்யும் விதமாகவோ இருக்கக்கூடாது.

மேலும்,உங்களின் படங்களை tndoe@tn.nic.in என்ற முகவரியில் அனுப்பலாம். அல்லது சுற்றுச்சூழல் துறைக்கு வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.environment.tn.nic.in எனும் இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version