பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூரில் உள்ள கல்லூரி ஒன்றில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி சார்பில், உலக பூமி தினத்தை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு, 400 சதுர அடியில் இந்த பிளாஸ்டிக் சுவர் கட்டப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிளாஸ்டிக் சுவர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கல்லூரி நிர்வாகிகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version