மாற்றுதிறனாளிகள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மாற்றுதிறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். மேலும், மாற்றுதிறனாளிகளுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள செல்போன் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாகன சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட 11 லட்சம் ரூபாய் ரொக்கம், 15கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.