அக்ஷய ஸ்ரீ சாய் சபை சார்பில் கடல் நீரை குடிநீராக மாற்றுவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம் மெரீனாவில் நடைபெற்றது.
சென்னை விவேகானந்தர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரை நடைபெற்ற இந்த நடைபயணத்தில் அச்சபையை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கையில் மூலிகைகள் கலந்த கலசங்களை ஏந்தியபடி கடல்நீரை குடிநீராக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் கடற்கரையை நோக்கி சென்ற அவர்கள் கலசத்தில் இருந்த மூலிகை நீரை கடலில் கரைத்தனர். பண்டைய காலத்தில் மூலிகைகளை வைத்து நம்முன்னோர்கள் நீரை தூய்மை படுத்தியதாகவும் அது போல வனங்களில் இருக்கும் பல்வேறு வகையான மூலிகைகளை பயன்படுத்தி செய்யப்படும் மூலிகை பொடிகள் மூலம் மூலம் கடல் நீரை சுத்த செய்ய முடியும் எனவும் அவர்கள் பிரசாரம் செய்தனர்.