அதிமுக அரசின் நல்லாட்சிக்கு விருதுகளே சாட்சி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 13 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்த திமுக, தமிழக மக்களுக்காக என்ன செய்தது என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். உள்ளாட்சித் துறையில் 104 தேசிய விருதுகளை பெற்று தமிழக அரசு சாதனை புரிந்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதிமுக அரசின் நல்லாட்சிக்கு விருதுகளே சாட்சி என்றார். மின்சாரத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவத்துறை என பல்வேறு துறைகளில் தமிழக அரசு, தேசிய விருது பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நூறு ஆண்டுகள் கடந்த காங்கிரஸ் கட்சியின் நிலைமையை எண்ணினால் பரிதாபமாக உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி வாக்கு இல்லாத கட்சி என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

Exit mobile version