பெண் குழந்தைகளின் விகிதாச்சாரத்தை அதிகரிக்கும் “பேட்டி பச்சாவோ பேட்டி பாதோ’’ என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதாச்சாரம் அடிப்படையில் சிறந்து விளங்கும் பிரிவில் நாமக்கல் மாவட்டத்துக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கடைகோடி மக்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.