அடடே! இதோ.. R-15 யின் தம்பி MT-15 வந்துவிட்டான்…

யமஹா பைக் நிறுவனம் தனது அடுத்த பைக் மாடலைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

பைக் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யமஹா நிறுவனம் இளைஞர்களை கவரும் வகையில் பைக்குகளை வடிவமைக்கும் என்பது தெரிந்த ஒன்றாகும். அதில் R -15 வகை பைக் இளைஞர்கள் இடையில் அதிக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு யமஹா நிறுவனம் MT-15 என்ற தனது புதிய பைக்கை 2019 மார்ச் மாதம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“டிரான்ஸ்பார்மர்” என்ற ஆங்கில படத்தின் வரும் ரோபோ முகத்தை போன்று MT-15 பைக்கின் முன்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

155சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மற்றும் ABS தொழில்நுட்பம் போன்ற சிறப்புகளை கொண்டுள்ளது இதன் விலை ரூ.1.20 முதல் 1.30 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version