சேலம் கம்பன் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிறைவு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். விழாவில் கம்பன் கழகத்தின் பொன்விழா மலரை ஜி.கே.வாசன் வெளியிட அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விழாவில் பேரூரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆங்கிலத்தில் பேசினால் தான் மற்றவர்கள் மதிக்கின்றனர் என்ற வறட்டு கவுரவத்தில் பலர், தாய்மொழியான தமிழில் பேசுவதை அதிகமாக தவிர்ப்பது வேதனை அளிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
Discussion about this post