புகைப்படங்களை இணையங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்- ஏ.கே.விஸ்வநாதன்

மிகவும் ஆபத்தான டிஜிட்டல் ஆன்லைன் விஷயத்தில், கவனமாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தனியார் கல்லூரியில், காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தொடர்ந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான நகரத்தில் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். AUTOMATIC AUDIO, VIDEO RECORDING என்பது அனைத்து கைப்பேசிகளிலும் இருப்பதாகத் தெரிவித்த அவர், இணையங்களில் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version