அரசு வெளியிட்டுள்ள வானூர்தி கொள்கை : உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்பு

தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு வானூர்தி உதிரி பாகம் உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கை 2019ஐ பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இந்த கொள்கை வானூர்தி உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள வானூர்தி கொள்கை மூலம் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும் என்றும் அடுத்த 10 ஆண்டுகளில் 70 ஆயிரம் கோடி அளவிற்கான முதலீடுகளும் 1 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று வானூர்தி தொழில் நிறுவன வளர்ச்சி சங்கத்தின் தலைவர் சேகர் தெரிவித்தார்.

-சுந்தரம், நிறுவனர், சேலம் ஏரோ பார்க்

புதிய தொழில் கொள்கையில் வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தியில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இக்கொள்கையின் வாயிலாக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

-சேகர், தலைவர், வானூர்தி தொழில் நிறுவனம்

Exit mobile version