அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பாணியைப் பின்பற்றி ‘ஜுராசிக் வேர்ல்டு’

ஜுராசிக் வேர்ல்டு படத்தின் அடுத்த பாகம் வரப்போவதாக படத்தின் நாயகன் க்ரிஸ் ப்ராட் தெரிவித்துள்ளார்.

ஜுராசிக் பார்க் 1993-ம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப்படம் இன்று வரை ஹாலிவுட் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. இப்படத்தின் 3ம் பாகம் கடந்த 2001-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தோடு ஜுராசிக் பார்க் படங்களை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் ஸ்பீல்பெர்க்.

அதன்பிறகு 14 வருடங்களுக்கு பிறகு ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்டு’ படம் வெளியானது. ஏற்கெனவே மூன்று பாகங்கள் வெளியாகியிருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்டு’ படவரிசையின் அடுத்த பாகம் உருவாகவுள்ளது.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் நாயகன் க்றிஸ் ப்ராட், “ஜுராசிக் வேர்ல்டு படத்தின் கதையை இயக்குநர் கோலின் ட்ரெவாரோ எழுதி முடித்துவிட்டார்.  ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம்’ எப்படி அனைவரையும் ஒன்றிணைத்ததோ அதேபோல இப்படமும் இருக்கப் போகிறது’’ என்று கூறினார்.

Exit mobile version