உதகை அருகேயுள்ள அவலாஞ்சி அணை முழுகொள்ளளவை எட்டவுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகளான மேல் பவானி, முக்குருத்தி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அவலாஞ்சி அணையும் முழுகொள்ளளவான 172 அடியில் 171 அடியை எட்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அவலாஞ்சி அணையிலிருந்து இரவு 9 மணியளவில் முதற்கட்டமாக 100 முதல் 200 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. எனவே, எமரால்டு, குந்தா, கெத்தை மற்றும் பில்லூர் உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.