செங்கல்பட்டு முதல் திருச்சி வரை சாலை விதிமுறைகளை மீறுவோருக்கு தானாகவே அபராதம் விதிக்கும் கேமிராவுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வாகன தணிக்கை பணிக்காக, மோட்டார் ஆய்வாளர்ளுக்கு இ-சலான் கருவி வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இ-சலான் கருவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் பேசிய அவர், போக்குவரத்து துறையை நவீனபடுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு முதல் திருச்சி வரை சாலை விதிமுறைகளை மீறுவோரை கண்டறிய கேமிராவுடன் கூடிய தனியங்கி அபராதம் விதிக்கும் கருவி பொருத்தும் பணி 25 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.