நாய் குறுக்கே வந்ததால் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது மோதிய ஆட்டோ

சென்னையில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் ஓரத்தில் உறங்கியவர்கள் மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.

சென்ட்ரலில் இருந்து தண்டையார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று, சாலை குறுக்கே இரண்டு நாய்கள் ஓடியதை கண்டு நிலை தடுமாறியுள்ளது. உடனே ஓட்டுநர் நாய்கள் மீது மோதாமல் இருக்க பிரேக்கை அழுத்திய போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலை அருகே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த மூவரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version